top of page

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை தமிழக முதல்வர் அவர்கள் (ஆகஸ்ட் 13, 2021) மாலை திறந்து வைத்து சிறப்பித்தார்.

100 படுக்கைகளுடன் இயங்கி வந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனை, தற்போது 300 படுக்கையுடைய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிடி ஸ்கேன், கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை 15.52 கோடி செலவில், 83 நாட்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்  வகுப்பிலிருந்து  இயங்கி வந்த  விடியல்  மாண்டி சோரி அரசு பள்ளியில் மழலையர் வகுப்பும்  இணைக்கப்பட்டது. இவ்விழாவை  திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page